தனியாா் பள்ளி ஆசிாியா்களுக்கு இரண்டு மாத ஊதியம் வழங்க வேண்டும், அரசுக்கு கோாிக்கை
மத்திய ...மாநில... அரசுகளுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் அவர்கள் அனுப்பியுள்ள அவசர... அவசிய... கோரிக்கை மனு தங்களின் மேலான கவனத்திற்கு அனுப்பி உள்ளேன். அருள்கூர்ந்து தமிழகத்தின் தலைசிறந்த அனைத்து ஊடகம் மற்றும் பத்திரிகையில் வெளியிட்டு ஆதரவு தெரிவித்து உதவிட வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்.
....,...........,.................
அனுப்புதல் ..
,.
கே.ஆர். நந்தகுமார்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன்
மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்
எண்.6. ஏகாம்பரம் தெரு பம்மல் சென்னை. 75.
பெறுதல்....
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. கே. பழனிச்சாமி. அவர்கள்.
தமிழக முதலமைச்சர் புனித ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகம் சென்னை.9.
பொருள்....
தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக தரவேண்டிய ஆர். டி. இ. கல்வி கட்டண பாக்கியை உடனே தந்தும் ..,.. தனியார் பள்ளி கட்டிடங்களுக்கான சொத்துவரி மின்கட்டண பாக்கி இ.எஸ்.ஐ. பி.எஃப் கட்டணம் செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டி கோரிக்கை மனு......
மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் சார்பில் எம் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களையும்.. பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். விவசாயிகளின் வீர மகனாய்ப் பிறந்து ஏழைகளின் ஏந்தல் மக்கள் முதல்வர் இ.பி.எஸ் .அய்யா அவர்களோடு இணைந்து பணியாற்றும் பள்ளிக்கல்வித்துறையை தலைநிமிரச் செய்தவர் மாண்புமிகு கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள்.... இன்றைக்கு சுகாதாரத்துறையின் கௌரவத்தை தலைநிமிரச் செய்த டாக்டர்.விஜயபாஸ்கர் அவர்களின் அற்புதமான பணியை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.
தமிழக அரசே நல்ல அரசு என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தமிழக மக்களை தொடாமல் இருக்க தாங்கள் ஆற்றிவரும் அளப்பரிய பணிக்கு அளவே இல்லை.
மாணவர்கள் நலனே முக்கியம் எனக் கருதி பள்ளிக்கல்வித்துறையில் 10/11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியாதவர்களுக்கும் மறுதேர்வு அனைவருக்கும் சம்பளம் 21 நாட்கள் 14 ஆம் தேதி வரைவீட்டில் இருக்கிற அனைவருக்கும் உணவு உடை இருப்பிடம் பாதுகாப்பு தந்து காத்து வரக்கூடிய தங்களை உளப்பூர்வமாக பாராட்டுகின்றோம்.
மனித உயிரின் மகத்துவம் அறிந்து எல்லோரையும் பாதுகாத்திட இந்த விடுமுறை காலத்தில் கூட அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு தங்களுக்கு அனைவரும் கை கூப்பி நன்றி செலுத்துகிறார்கள்.
இந்நிலையில் தமிழக அரசு தனியார் பள்ளிகள் மீதும் சற்று கருணை காட்டவேண்டும் என்றும் தமிழ்நாடு முழுக்க 90% தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண பாக்கி இன்னும் 50% நிலுவையில் இருக்கிறது தேர்வு நடந்திருந்தால் கூட 25 சதவீத கட்டணத்தை கஷ்டப்பட்டு வசூலித்து இருப்போம். தேர்வு இல்லை என்றாகிவிட்ட நிலையில் ஒரு பைசா கூட வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எங்களால் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் வட்டி கட்ட முடியாமல் வரிகட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றோம்.
எனவே தனியார் பள்ளிகள் 25% அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி2018.19. மற்றும் 2019 ...2020 இரண்டு ஆண்டுகளாக மாணவர்களை சேர்த்து கல்வி கற்பித்த வகையில் மத்திய மாநில அரசுகள் தர வேண்டிய கல்வி கட்டண பாக்கியை குறைந்தது ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது அதை மட்டுமாவது எங்களுக்கு உடனடியாக திருப்பி தந்தால் நாங்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் தர வேண்டிய சம்பளத்தை மார்ச் ..ஏப்ரல் ...மே... மாதங்களில் தந்து விடுவோம்
இல்லையென்றால் எங்கள் வாழ்வும் வறுமையில் வாடும் எங்கள் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வும் மிகக் கஷ்டமான சூழலை உருவாக்கி விடும். கௌரவமான குடும்பச் சூழலில் வாழும் எங்களால் யாரிடமும் கையேந்தி வெளியில் வரமுடியாத சூழல் இருப்பதால் எங்கள் நிலை உணர்ந்து எங்களுக்கு வழங்க வேண்டிய ஆர் டி. இ. கல்விக்கட்டண பாக்கியை அரசு உடனே தந்துவிட்டால் பிரச்சினையும் தீர்ந்துவிடும்......
அதேபோல் இந்தியா முழுவதும் அறக்கட்டளை மூலம் நடைபெறக்கூடிய கல்வி ஸ்தாபனங்களுக்கு சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு சொத்துவரி இதுவரை வசூலிப்பதில்லை. தமிழகத்தில் மட்டும் புதிதாக சொத்து வரி கட்ட வேண்டும் என்று அனைத்து உள்ளாட்சி நகராட்சி மாநகராட்சி அதிகாரிகள் பள்ளியை ஜப்தி செய்துவிடுவோம் சீல் வைத்து விடுவோம் என்று எங்கள் நிர்வாகிகளை மிரட்டி வசூலிக்கும் போக்கை கைவிட்டு தனியார் பள்ளி கட்டிடங்களுக்கு சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றோம்.
அதேபோல் நாங்கள் இதுவரை கட்டிவந்த பி.எஃப் .இ.எஸ்.ஐ. மின்சார கட்டணம் பள்ளியை திறக்க முடியாத இச்சூழலில் பள்ளி கட்டணம் வசூலிக்க முடியாத நிலையில் ஒவ்வொரு பள்ளியும் பல்லாயிரக்கணக்கில் மேற்கண்ட கட்டணத்தை செலுத்த முடியாமல் தத்தளித்து வருவதால்....
இந்திய வருமான வரித்துறை ஜிஎஸ்டி ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் தந்தது போல் நீங்களும் கால அவகாசம் தந்து விட்டால் நாங்கள் ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் அனைத்து நிலுவை கட்டணங்களையும் செலுத்திட கால அவகாசம் தர வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறோம்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் வாழ்வில் மகிழ்ச்சியை தந்திட வேண்டுமாய் அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
உண்மையுள்ள
கே.ஆர். நந்தகுமார்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.