விக்ரம் சாராபாய் அவர்களின் நூற்றாண்டு விழா

விக்ரம் சாராபாய் அவர்களின் நூற்றாண்டு விழா



இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தந்தை விக்ரம் சாராபாய் அவர்களின் நூற்றாண்டு விழாவை இந்தியா முழுக்க மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றோம். சென்னையில் ஐஐடியில் நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சிகளில் இந்திய ஜனாதிபதி அவர்களின் வருகையால்பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை பூந்தமல்லி அருகே தண்டலம் சவீதா பல்கலைக் கழகத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை 28.. 29 பிப்ரவரி 2020இரண்டு நாட்கள் நடைப்பெற்றது,



இந்தியவிண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதள கண்காட்சியை இதுவரை 3 லட்சம் மாணவர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வானவியல் ஆராய்ச்சி குறித்தான பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி ஓவியப் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிகாட்டுவதற்கு உதவியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தந்தை விக்ரம் சாராபாய் அவர்களின் நூற்றாண்டு விழா சென்னை சவீதா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் நமது மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நந்தகுமார் அவர்களுக்கு இஸ்ரோவின்  சார்பில் விருது வழங்கி இஸ்ரோ விஞ்ஞானிகளால் கௌரவிக்கப்பட்ட போது எடுத்த படம்.