தமிழக முதல்வாிடம் நமது சங்கத்தின் கோாிக்கை மனு
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நமது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...திருவாரூர் டெல்டா மாவட்டத்தை விவசாய பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தமைக்கு மாண்புமிகு . தமிழக முதல்வர். எடப்பாடி கே .பழனிச்சாமி அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு வந்தபோது
உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அவர்களின்
நல்வழிகாட்டுதல்படி மாண்புமிகு தமிழக முதல்வரை சந்திக்க முன்கூட்டியே நமக்கு நேரம் ஒதுக்கிய மையால் அவருக்கு நமது சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவித்து கோரிக்கை மனு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கே.ஆர். நந்தகுமார் திருவாரூர் மாவட்ட தலைவர்கள் மன்னார்குடி ரமேஷ். மலையரசன். திருவாரூர் சந்திரா முருகப்பன். சின்னராஜி. முரளிதரன் .நாகராஜன். நாகை மாவட்ட தலைவர் என்.குடியரசு உள்ளிட்டோர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல். சீனிவாசன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை மற்றும் பல்வேறு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து நமது கோரிக்கை மனுக்களை கொடுத்து தனியார் பள்ளிகளை பாதுகாத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போது எடுத்த படத்தை பள்ளி நிர்வாகிகளின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். அத்துடன் முதல்வா் அவா்களிடம் கொடுத்த கோாி்க்கை மனுவையும் தங்கள் முன் சமா்பிக்கிறேன்,
பெறுதல்
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
புனித ஜார்ஜ் கோட்டை
சென்னை-9
பொருள் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளின்நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமாய் வேண்டுகோள் விண்ணப்பம்.
ஐயா வணக்கம்
மாண்புமிகு புரட்சித் தலைவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அவர்களின் பொற்கால ஆட்சிக்கு பின்னால் அவர்களை மிஞ்சும் வகையில் மக்களோடு நான் மக்களுக்காக நான் எனும் தாரக மந்திரத்தோடு மக்களின் மனமறிந்து மிக எளிமையாகவும் இனிமையாகவும் எல்லோரிடமும் பழகி நல்லாட்சி நடத்தி மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி மிகச் சிறந்த நல்லாட்சி நடத்தி....
எல்லா துறையும் ஏற்றம் பெற்று இந்திய திருநாட்டிலே மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி ... அதிலும் பள்ளி கல்வித்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து நான்காண்டு காலம் நல்லாட்சி தந்த தங்களுக்கு எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அன்றும் இன்றும் என்றும் எம் பள்ளி நிர்வாகிகள் எம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் எம் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் என எல்லோரின் ஆதரவும் பெற்று நடைபெற்ற சட்டமன்ற நாடாளுமன்ற உள்ளாட்சி தேர்தலில் கூட தேர்தல் பணியாற்றி மாபெரும் வெற்றிக்கு ஒரு தனியாக இருந்தோம்.
நமது நல்லாட்சிக்கு எதிராக ஒரு நாளும் ஒரு போராட்டம் கூட எங்கள் தனியார் பள்ளிகள் செய்தது இல்லை எங்களுக்கு எண்ணற்ற உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு, கே,ஏ, செங்கோட்டையன் அவர்கள் செய்து இருக்கிறார் என்பதை எந்நேரமும் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.
இந்நிலையில் எமது தனியார் பள்ளிகளுக்கு உடனடியாக தீர்க்கவேண்டிய பல்வேறு கோரிக்கைகளை தங்களின் மேலான கவனத்திற்கு பணிவோடு சமர்ப்பிக்கின்றோம்.
கோரிக்கைகள்.
..
1, தமிழகத்தில் செயல்படும் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் பலவும் பள்ளி கட்டிடங்களுக்கான அனுமதியை அக்கால சட்டப்படி உள்ளூர் கிராம பஞ்சாயத்து நகராட்சி மாநகராட்சியில் கட்டிட அனுமதி பெற்று கட்டப்பட்ட பழைய பள்ளி கட்டிடங்களுக்கு தற்போது டிடிசிபி சிஎம்டிஏ எல்பிஏ அனுமதி கேட்பது இயலாத காரியம் அதுவும் 2011 க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு உள்ளாட்சி தலைவரிடம் அனுமதி பெற்றிருந்தால் போதுமானது பழைய பள்ளி கட்டிடங்களுக்கு டிடிசிபி, சிஎம்டிஏ., எல்பிஏ, அனுமதி தேவை இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பிலும் சொல்லப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் எதற்குமே மேற்கண்ட கட்டிட அனுமதியோ தீயணைப்புத்துறை தடையின்மை சான்றோ சுகாதார சான்றோ கட்டிட உறுதி சான்றோ கட்டிட உரிமை சான்றோ தொடர் அங்கீகாரம் புதுப்பித்தல் ஆணையோ பெறுவதில்லை.
2, தனியார் பள்ளிகள் மட்டும் ஆண்டுதோறும் மேற்கண்ட சான்றுகளுடன் தொடர் அங்கீகாரம் பெற வேண்டும் என்கிற கடும் நிபந்தனைகள் பெரும் பணச் செலவும் கால விரயமும் ஏற்படுகிறது. எனவே மேற்கண்ட சான்றுகளை ஆண்டுதோறும் பெறவேண்டும் என்பதில் இருந்தும் பழைய பள்ளி கட்டிடங்களுக்கு டிடிசிபி எல் பி ஏ சிஎம்டிஏ கட்டிட அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளித்து ஆண்டுதோறும் வழங்கும் தொடர் அங்கீகாரத்தை புரட்சித்தலைவிஅம்மா ஆட்சியில் இருந்தது போல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தொடர் அங்கீகாரத்தை ஆன்லைன் மூலமாகவே புதுப்பித்து தரவேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றோம்.
3, சுகாதாரச் சான்று, தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாங்கினால் போதும் என்று இருந்த நிலை மாறி தற்போது ஆண்டுதோறும் மேற்கண்ட சான்றிதழ்களை வாங்க வேண்டும் என்று வற்புறுத்துவதால் பள்ளி நிர்வாகிகள் மேற்கண்ட அதிகாரிகளுக்கு பல்லாயிரக்கணக்கில் பணம் தந்து பல நாட்கள் இழுத்தடித்து சுகாதார மற்றும் தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்று பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது நமது தமிழக அரசுக்கு கெட்ட பெயரை தான் உருவாக்குகிறது இதனால் அரசுக்கு எந்தவித லாபமும் கிடையாது. பள்ளி நிர்வாகிகளுக்கு மிகுந்த மன உலைச்சல் பண நஷ்டம். எனவே மேற்கண்ட குறையை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கட்டிட உறுதிச் சான்று, கட்டிட உரிமைச் சான்று அந்தந்த வட்டாட்சியர் களால் வழங்கப்படுவது போல் சுகாதாரச் சான்று, தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்று இரண்டையும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டுமாய் எமது சங்கத்தின் சார்பில் வேண்டுகின்றோம்.
4, அரசு அங்கீகாரம் பெற்று பத்து ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அரசாணை உள்ளது அதை ஏற்று பல பள்ளிகளுக்கு கடந்த காலங்களில் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அத அரசாணைக்கு மீண்டும் உயிர் தந்து அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் ஆணை வழங்குவதை உறுதிப்படுத்திடநடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அது வித்திட வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம்.
5, அரசு தொடக்க பள்ளிகளை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்துவது போல் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என்று பணிவோடு வேண்டுகின்றோம்.
6, அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25 சதவீத மாணவர்களை இலவசமாக சேர்த்திட்ட வகையில் தனியார் பள்ளிகளுக்கு தர வேண்டிய கல்வி கட்டண பாக்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளதால் தனியார் பள்ளிகள் நடத்துவது மிகவும் கடினமாக உள்ளது. ஆசிரியர்களுக்கும் இன்னபிற ஊழியர்களுக்கும் சம்பளம் கூடவழங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். அதை மனதில் நிறுத்தி எங்களுக்கு வழங்கவேண்டிய இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி கட்டண பாக்கியை உடனடியாக வழங்கிட பரிந்துரை செய்ய வேண்டுமாய் பணிவோடு வேண்டுகின்றோம்.
அந்தந்த ஆண்டுக்கான ஆர்டிஇ கல்வி கட்டணம் அந்த அந்த ஆண்டே வழங்கிட வேண்டும் என்றும் அரசு ஒரு மாணவனுக்கு அரசுப்பள்ளியில் எவ்வளவு செலவு செய்கிறதோ அந்த கட்டணத்தை தர வேண்டுமென்றும் வேண்டுகின்றோம். அதைவிடுத்து முன்னாள் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் அவர்கள் ஆர்டிஇ கல்வி கட்டணம் சம்பந்தமாக ஒரு உத்தரவு போட்டு அந்த உத்தரவு படியும் பணம் தராமல் அதைவிட குறைவான கல்வி கட்டணத்தை தருவதை எங்கள் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மன உளைச்சலோடு எதிர்கொண்டு கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்கிற எங்கள் வேதனையை உங்களோடு பகிர்ந்து அதை நீக்கும் வண்ணம் எங்களுக்கு அரசுப் பள்ளி மாணவனுக்கு தமிழக அரசு எவ்வளவு பணம் ஓராண்டுக்கு செலவழிக்கிறதோ அந்தத் தொகையை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை பணிவோடு வேண்டுகின்றோம்.
7, எமது தனியார் பள்ளிகள் அனைத்தும் அறக்கட்டளை மூலம் நடைபெறக்கூடிய கல்வி ஸ்தாபனங்கள். இக்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு கல்வி போதிக்க கூடிய பொது காரியத்தை செய்து வருகிறது. இக்கல்வி நிறுவனங்களுக்கு அரசுப் பள்ளிகளைப் போல் இதுவரை சொத்துவரி கட்டிட வரி வசூலிக்கவில்லை. அறக்கட்டளை மூலம் நடைபெறக்கூடிய கல்வி ஸ்தாபனங்களுக்கு சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்கிற அரசாணைப்படி நாங்கள் யாரும் சொத்து வரி கட்டவில்லை இச்சூழலில் தமிழக அரசு தனியார் பள்ளிகள் மட்டும் சொத்து வரி கட்டவேண்டும் என்று பல லட்சக்கணக்கில் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றோம்.
ஏழை எளிய மாணவர்கள் பொருளாதாரத்தில் குறைந்தவர்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்டவர்கள் பலரும் எமது பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவது இல்லை. இந்நிலையில் தற்பொழுது சொத்து வரி கட்ட வேண்டும் என்று பல இடங்களில் மிரட்டி பள்ளிகளை ஜப்தி செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள். இது எமது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீது சுமத்தப்படும் சுமையாக அமையும் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 10 சதவீத பள்ளிகள் மட்டும் தான்வருமானம் கிடைக்கும். மீதமுள்ள 90 சதவீத பள்ளிகளில் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் தான்நடத்தி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு தனியார் பள்ளிகளுக்கு மட்டும் போடப்பட்டுள்ள இந்த சொத்து வரியை தயவு செய்து ரத்து செய்திட வேண்டுமாய் மெத்த பணிவோடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்.
7, தனியார் பள்ளிகளுக்கு தொடர்அங்கீகாரம் வழங்கிட கடந்த காலங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் என்கிற பதவி இருந்தது தற்போது அது ஒழிக்கப்பட்டு அரசாணை எண் 101 போடப்பட்ட பின்னால் முழு அதிகாரமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டதால் பல்வேறு காரணமாகவும் தனியார் பள்ளிகள் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் கைவிட்டு தரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாலும்...ஆதனால் அரசுக்கு பெரும் அவப்பெயர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும் அனைத்து தனியார் பள்ளிகளை ஒருங்கிணைத்து தனி இயக்குனரகம் தொடங்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளதால் தனியார் பள்ளிகளை கண்காணிக்கவும் வழிநடத்தவும் தொடர்அங்கீகாரம் தரவும் அந்தந்த மாவட்டத்திற்கு ஒரு தனியார் பள்ளிகள் ஆய்வாளரை இன்ஸ்பெக்டர் ஆஃப் ப்ரைவேட் ஸ்கூல்ஸ் என்று நியமித்து தனியார் பள்ளிகளை வழி நடத்த வழிவகை செய்ய வேண்டுமாய்
பணிவோடு வேண்டுகின்றோம்.
8, தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளி வாகனங்கள் காலை இரண்டு மணிநேரம் மாலை இரண்டு மணி நேரம் மட்டும் பள்ளிவேலை நாளான ஆண்டுக்கு 200 நாள் மட்டும் மாணவர்களை கல்வி கற்க ஏற்றி இறக்கி பாதுகாப்போடு கல்விப் பணியாற்றி வருகின்றோம். இந்நிலையில் சாலை வரிஇருக்கை வரி இன்சூரன்ஸ் என ஆம்னி பேருந்துகளுக்கு கட்டுவதுபோல் போர் ஆண்டுக்கான கட்டணமாக ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு வண்டிக்கும் பல்லாயிரக்கணக்கில் கட்டி ஆண்டுதோறும் வருகின்றோம் .எனவே தனியார் பள்ளி வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தில் 50% விதிவிலக்கு வழங்கிட தமிழகஅரசு பரிந்துரைத்து அரசாணை வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.
அதேபோல் தனியார் பள்ளி வாகனங்கள் மட்டும் குறிப்பிட்ட சில நிறுவனங்களிடமிருந்து மட்டும் வேகக்கட்டுப்பாட்டு கருவி சிசிடிவி கேமரா ஜிபிஆர்எஸ் கருவி பொருத்த வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் .அதனால் ஒரு பயனும் இல்லை வீணான பணச்செலவு மன உளைச்சலும் தான் கருவிகளை ஒரு சில நாட்களிலேயே மாணவர்கள் பிரித்துப் போட்டு விடுகிறார்கள். அதுவும் அவர்கள் தரக்கூடிய வேக கட்டுப்பாட்டு கருவி சிசிடிவி கேமரா ஜிபி ஆர்எஸ்சும் வேலை செய்வது இல்லை. இதனால் பள்ளி நிர்வாகிகளுக்கு மிகுந்த மன உளைச்சலும் பண நஷ்டமும் ஏற்பட்டுள்ளது என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
எங்கள் கஷ்டங்களை ஏற்று புரிந்து கொண்டு எங்களுக்கு உதவ வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம்..,மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி எமது பள்ளி நிர்வாகிகளையும் வாழ வைத்து நல் வழிகாட்ட வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித் துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களை மெத்தப் பணிவோடு வேண்டி கேட்டு கொள்கிறோம்
நன்றியுடன் உண்மையுள்ள
கே. ஆர். நந்தகுமார்,
மாநில பொதுச்செயலாளர்