பொதுத் தோ்வு எழுதும் +2 மாணவ , மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்

பொதுத் தோ்வு எழுதும் +2 மாணவ , மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்



இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்


மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கடந்த நாட்கள் முழுவதும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு தங்கள் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் நூற்றுக்கு நூறு சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும் என்று எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது எங்களுக்கு தான் தெரியும் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்களின் உழைப்பு வீண் போகாது


தமிழகத்தில் தரமான கல்விக்கு நிலையாக உழைக்கும் அனைத்து தனியார் பள்ளியின் நிர்வாகிகளின் கனவு மெய்ப்படும் அரசு எவ்வளவு நம்மை நசுக்கினாளும்  பீனிக்ஸ் பறவை போல் சிறகை விரித்துப் பறந்து தொடர்ந்து நிமிர்ந்து வீறுநடை போடுவோம் நடைபெறும் இப்போது தேர்வில் வரலாற்றுச் சாதனையை நமது மாணவர்கள் அனைவரும் பெறவேண்டும்


தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் விடாமுயற்சியோடு நீங்கள் இத்தனை நாள் படித்ததை ஒன்றுவிடாமல் சிந்தித்து எழுதுங்கள் ஒரு நிமிடம் கூட வீணாக்க வேண்டாம் எழுதியதே திரும்ப எழுத வேண்டாம் தவறான விடைகளை எழுத வேண்டாம்....


முயற்சி செய்யுங்கள் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் . தெய்வத்தால் ஆகதெனின் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதற்கு 
நம் பள்ளி மாணவர்களே உதாரணம் என்பதை இந்த உலகுக்கு காட்டுவோம்


பிளஸ் 2 தேர்வில் அனைத்து மாணவ கண்மணிகளும் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம் இத்தேர்வில் மாணவர்கள் அனைவரும் இமாலயச் சாதனை புரிய வாருங்கள் என்று வணங்கி வரவேற்கின்றோம். வாழ்த்துகின்றோம்,


என்றும் கல்விப்பணியில் உங்கள்


கே.ஆா்.நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.