விடுமுறையை மாற்ற வேண்டி முதல்வருக்கு கோாிக்கை

விடுமுறையை மாற்ற வேண்டி முதல்வருக்கு கோாிக்கை



மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு. கே. பழனிச்சாமி.
அவர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கே. ஆர். நந்தகுமார் அவர்கள் எழுதிய கோரிக்கை விண்ணப்பம். பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் பள்ளி நிர்வாகிகள் பார்வைக்கு பணிவோடு சமர்ப்பிக்கின்றோம்.


பெறுதல்....
         மாண்புமிகு எடப்பாடி திரு. கே. பழனிச்சாமி அவர்கள்


         தமிழ்நாடு முதலமைச்சர்


        தலைமைச் செயலகம். புனித ஜார்ஜ் கோட்டை. சென்னை. 9 .



பொருள்..    தமிழகத்தில் உள்ள அனைத்து ப்ரீ கேஜி எல்கேஜி யுகேஜி 1 ஆம் வகுப்பு                                 முதல் 5 ஆம் வகுப்பு வரை மார்ச் 31ம் தேதி வரை கொரானா நோய் வராமல்                           பாதுகாப் பதற்காக விடப்பட்டுள்ள பொது விடுமுறையை ஓரிரு நாட்களில்                             தளர்த்தி தரவேண்டுமாய் வேண்டுதல் விண்ணப்பம்


......
ஐயா..... வணக்கம்....


         தமிழகத்தை கல்வியிலும் சுகாதாரத்திலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதிலும் விவசாயத்தை மேம்படுத்துவதிலும் தொழில்துறையை பெருக்குவதிலும் முன்னிலை வகித்து வருவதில் தமிழக அரசின் பணிகள் பாராட்டுக்குரியவை அதிலும் மாண்புமிகு. சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களின் கொரானா நோய்தடுப்பு நடவடிக்கைகள் போற்றுதலுக்குரியது.


      மாண்புமிகு. பள்ளிக்கல்வி அமைச்சர் பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதில் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வரவேற்கத்தக்கது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு மட்டும் ஒரு வாரம் விடுமுறை என அறிவித்துவிட்டு இன்றைக்கு ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று அறிவித்திருப்பது தற்போதைக்கு தேவையில்லாதது.


       தமிழகம் பாதுகாப்பாக இருக்கிறது. தமிழக குழந்தைகளை இந்த நோய் அண்டாது தேர்வு நடைபெறும் நேரம்.... பாடம் முடித்தாக வேண்டும் பாதுகாப்பு மிக முக்கியம் இல்லை என்று சொல்லவில்லை அண்டை மாநிலங்கள் விடுமுறை விட்டு விட்டார்கள்... என்பதற்காக நாமும் 15 நாட்கள் விடுமுறை விட வேண்டும் என்பது விதி அல்ல...


    .. எனவே கல்வியின் அவசியம் கருதியும் இந்த விடுமுறையை தளர்த்தி ஓரிரு நாட்கள் கழித்து மீண்டும் பள்ளியை திறந்து பாடங்களை நடத்தி விரைவாக தேர்வுகளை முடித்து பிள்ளைகளை பெற்றோருடன் சேர்த்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


     கொரானா நோய் சம்பந்தமான தற்பாதுகாப்பும் சுகாதாரம் சம்பந்தமாக மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே 15 நாட்கள் விடுமுறை என்பது தற்போதைக்கு தேவையில்லாதது.


எனவே அருள்கூர்ந்து மறுபரிசீலனை செய்து மீண்டும் பள்ளிகள் ஓரிரு நாட்களில் திறந்து பாடம் முடித்து தேர்வுகளை முடித்து முழுஆண்டு தேர்வை முழுமையாக நடத்திவிட்டால் கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக அமையும் என்று தமிழ்நாடு முழுக்க உள்ள பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் தங்கள் மேலான கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்....


      என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம்.. 


தங்கள் உண்மையுள்ள


கேஆர் நந்தகுமார்


மாநில பொதுச்செயலாளர்