10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா?

TN 10th Public Exam 2020:


SSLC 2020 Exam  பொதுத்தேர்வு நடைபெறுமா?



கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இந்தாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா, தள்ளி வைக்கப்படுமா அல்லது தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்படுமா உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறிய கருத்துக்களையும், மற்ற தேசிய நுழைவுத்தேர்வுகள் நிலைமையைப் பற்றியும் விரிவாக இங்கு காணலாம்.




இன்று மார்ச் 30 ஆம் தேதி நிலவரப்படி, இதுவரையில் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 1,071 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 29 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 


கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இதை தவிர வேறு வழியே இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்து விட்டார்.





இப்படியான சூழலில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்விக் குறியாகியுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி, சட்டசபையில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்றார்.


ஆனால், ஊரடங்கு முடிந்த உடனே, ஏப்ரல் 15 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் இல்லை. தேர்வுக்கான பணிகள் கிடப்பில் உள்ளது. மாணவர்களின் விவரங்கள் முதல் தேர்வு மையம், தேர்வு அறை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளது. இவை அனைத்தும் ஒரே நாளில் செய்து விட முடியாது. 





மே தொடக்கத்தில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. அந்த தேர்வுகளே ஒத்தி வைக்கப்பட்டு விட்டன. அதாவது மே மாதம் நடைபெறவிருந்த தேர்வுகளே ஒத்தி வைக்கப்பட்டு விட்டன. அப்படி இருக்கையில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் எப்படி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த முடியும்? அதுவும் தேர்வுப்பணிகள் எதுவும் நிறைவு பெறாத நிலையில், இது எப்படி சாத்தியமாகும்? எ்ன்றும் சிலா் கேள்வி கேட்கின்றனா்,





இது தொடர்பாக கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் இரண்டு விதமான சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தனர். ஒன்று தேர்வின்றி தேர்ச்சி முறையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களை ஆல் பாஸ் செய்வது. அப்படி இருக்கும் போது, மாணவர்களின் அரையாண்டு, காலாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பாஸ் செய்ய முடியும். ஆனால், இவ்வாறு செய்தால் மாணவர்களின் மதிப்பெண்னை அந்தந்த பள்ளி நிர்வாகமே தீர்மானிக்கும் சூழல் உருவாகி விடும். அது சாத்தியமில்லை,





இரண்டாவது, ஒரு வேளை தேர்வின்றி தேர்ச்சி முறை கொண்டு வந்தால், அடுத்தாக 11 ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 10 ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண்னை வைத்தே, 11 ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்துவது வழக்கம். எனவே, தேர்வின்றி தேர்ச்சி முறை கொண்டு வந்தால், மேற்கொண்டு பாலிடெக்னிக், அட்மிஷன், 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை சிக்கலாகி விடும்.





இந்த  இக்கட்டான சூழ்நிலையில் தான் தேசிய தேர்வு முகமையும், சிபிஎஸ்இ கல்வி வாரியமும் உள்ளது. நீட், ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்துவது கேள்விக் குறியாகியுள்ளது. இதனால், 2020-21 கல்வியாண்டிற்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை, பொறியியல் சேர்க்கை சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளது.


இ்நத தோ்வுகள் தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணமே கொரானா விடுமுறையால் மாணவா்கள் தோ்வுக்கு தயாராக முடியாது என்பதால் தான், இதற்காக  எல்லாம் நுழைவுத்தேர்வுகளை நடத்தாமலும் இருக்க முடியாது.


இது தொடர்பாக சிபிஎஸ்இ, NTA தரப்பில் கூறுகையில், நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும். ஆனால், தேர்வு முடிவுகள் சீக்கரமாகவே அறிவிக்கப்படும். எவ்வளவுக்கு எவ்வளவு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகிறதோ அதற்கு தகுந்தாற் போல், 2020-21 கல்வியாண்டிற்கான அட்மிஷன் நடத்துவதில் பாதிப்புகள் குறையும்.





எனவே, இதே போன்று தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சற்று காலத்தாமதமாக நடப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிந்த உடனையே, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 11 ஆம் வகுப்பு, டிப்ளமோ தொழிற்படிப்பு அட்மிஷன் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தமிழக கல்வித்துறை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில், மாணவர்கள் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்துப்படுகிறார்கள்.


நமது நாட்டை பொறுத்தவரை கொரானா பொிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை,அதற்கு காரணம் தமிழக அரசு எடுத்த முன்எச்சாிக்கை நடவடிக்கைகள் தான், எனவே அது தீவிரமாக பரவுவதற்கான வாய்ப்புகளும் இல்லை, எனவே முதல்வா் சட்டமன்றத்தில் அறிவித்ததப் போன்று ஏப்ரல் 15ம் ேததியே தோ்வுகள் தொடங்கப்பட்டாலும் ஆச்சாியப்படுவதற்கு ஒன்றும் இல்லை, இதற்கான அறிவிப்பு 5ஆம் தேதிக்கு பிறகு வரலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது, எனவே எதற்கும் தயாராக இருங்கள்,