திருவள்ளூவர் நர்சரி பிரைமரி பள்ளிக்கு உதவி பொறந்த ஊருக்கு புகழை தேடு அமைப்புக்கு கண்டனம்

திருவள்ளூவர் நர்சரி பிரைமரி பள்ளிக்கு உதவி பொறந்த ஊருக்கு புகழை தேடு அமைப்புக்கு கண்டனம்



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சீனா மங்கலம் திருவள்ளூவர்
நர்சரி பிரைமரி பள்ளியில் நடந்த ஒரு விபத்தில்ஒரு மாணவன் உயிரிழந்த நிலையில் இரா. குணால் என்கிற இன்னொரு மாணவனின் உயிரை காப்பதற்காக அவர் குடும்பத்திற்கு  உதவுவதற்காக மருத்துவ உதவிக்காக வும் நலிந்து போன நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகி திருமதி. ராதிகா குணசேகரன் அவர்கள்தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுக்கும் அவருக்கு வேண்டிய உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்
உதவி புரிய வேண்டி வேண்டுகோள் விண்ணப்பத்தை வைத்தார்.


அது அவரது கடமை உரிமை அவருக்கு உதவி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகிகளின் மனிதாபிமானம் மிக்கவர்களின் நற்கடமை . அதில் மூன்றாவது நபராக சுயலாபம் தேடுவதற்காக பொறந்த ஊருக்கு புகழை தேடு என்று தான் பிறந்த ஊருக்கு இழிவைத் தேடித் தரும் வகையிலும் யாருக்கும் உதவக் கூடாது என்ற கெட்டஎண்ணத்திலும் பள்ளியின் பெயருக்கு கெடுதல் உண்டாக்க வேண்டும் பள்ளி நிர்வாகிக்கும் குடும்பத்தாருக்கும் விபத்தில் சிக்கி பாதிப்படைந்த
குடும்பத்தார்களுக்கு மன உளைச்சலை தந்து அவமானப்படுத்தும் வகையிலும் பள்ளி நிர்வாகி வலைதளங்களில் பிரசாரம் செய்து பண மோசடி செய்வதாக பொய்யான புகாரை மனிதாபிமானமே இல்லாமல் பொய்யான புகாரை தந்துள்ள மணிமாறனின் இந்த மோசமான செயலை   எமது மாநில சங்கம் மிக வண்மையாக கண்டிக்கிறது.


அதில் தங்களுக்கு என்ன வந்தது என்று தெரியவில்லை தாங்கள் ஒரு பைசா கொடுக்கவில்லை எமது சங்க நிர்வாகிகள் சுமார் ரூ 50 ஆயிரத்திற்கு மேல் மனமுவந்து ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகவே கொடுத்திருக்கிறார்கள். இது எங்களுக்குள் நாங்கள் செய்து கொள்ளக்கூடிய மனிதாபிமான உதவி. இதில் தங்களுக்கு என்ன வந்தது இதில் யாருக்கு என்ன நஷ்டம் இதற்காக இப்படி கஷ்டப்படுகிற நேரத்தில் ஏன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பொய்யான புகார் தர வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் உங்களுக்கோ உங்கள் லெட்டர் பேட் சங்கத்திற்கு 
என்ன புகழ் வந்துவிடப்போகிறது.


இதுவா பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் செயல் இந்த அவமானகரமான செயலை செய்துதான் பொய்யான புகழை தேட வேண்டுமா.தயவு செய்து  கொடுத்துள்ள பொய்புகாரை திரும்பப் பெற்று முடிந்தால் உதவி செய்யுங்கள் யாருக்கும் உபத்திரம் செய்ய வேண்டாம் அல்லது ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள். வாழு அல்லது வாழவிடு பிறரைக் கெடுக்கும் எண்ணம் வேண்டாம் என்றும் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்.


தொடர்ந்து நீங்கள் பள்ளி நிர்வாகிகளுக்கு இதுபோன்ற மன உளைச்சல் தரக்கூடிய காரியங்களைச் செய்தால் உதவி புரிய வேண்டும் என்ற எண்ணமும் ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணமும் நாட்டு மக்களுக்கு வராமல் போய்விடும் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கக்கூடிய இக்காலத்தில் உதவி புரிவது என்ன குற்றம் எத்தனை லட்சங்களை பள்ளி நிர்வாகி எத்தனை பேரிடம் ஏமாற்றியிருக்கிறார் தயவுசெய்து இதுபோன்ற பொய் பிரச்சாரங்களை தவிர்க்க வேண்டுமாய் அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன் 


நல்லா எண்ணத்தில்
பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்கு உதவி புரிய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஆயிரக்கணக்கில் கொடுத்து உதவிய நல்ல உள்ளங்களுக்கும் அதைக் கொண்டு சென்று பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக உதவி புரிந்த சங்க தலைவர் களுக்கும் மாநில சங்கத்தின் சார்பில் உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் இதுபோன்று எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் கவலைப்படாமல் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


கே,ஆா். நந்தகுமாா்,


மாநில பொதுச்செயலாளர்