மாவட்ட நிா்வாகிகளுக்கு அன்பு வேண்டுகோள்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம். தங்கள் மாவட்டத்தில் நமது சங்கத்தின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் உடனடியாக நமது வாட்ஸ் அப் குழு மூலம் அனுப்பிட வேண்டும். குறிப்பாக மாவட்ட தலைவர் துணைத் தலைவர் மாவட்ட செயலாளர் துணைச் செயலாளர் மாவட்ட பொருளாளர் ஒன்றிய தலைவர் செயலாளர் பொருளாளர் ஒன்றிய துணைச் செயலாளர் துணைத்தலைவர் மாவட்ட அமைப்பு செயலாளர் மாநில நிர்வாக குழு மாநில செயற்குழு உள்ளிட்ட பொறுப்புகளுக்கு உங்கள் மாவட்டத்தில் நமது சங்கத்தில் உறுப்பினராகவும் நம் சங்கத்தின் மீது மிகுந்த நட்பும் மரியாதையும் சேவை மனப்பான்மையும் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிற பள்ளி நிர்வாகிகளை ஒருங்கிணைக்ககூடிய ஆற்றல் வாய்ந்தவர்களை சங்கத்தின் தலைவராக உடனடியாக மாவட்ட தலைவர்கள்
மாவட்ட வட்ட நிர்வாகிகளை நியமித்து மாநில சங்கத்துக்கு அனுப்பி அங்கீகாரத்தை பெற்று தமிழ்நாடு முழுக்க அனைவருக்கும் தெரிவித்து அவர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் மாநில மாவட்ட அளவில் அங்கீகாரம் வழங்கி சிறப்பிக்கவும் வருங்காலங்களில் மத்திய மாநில அமைச்சர்கள் மாநில ஆளுநர்களை சந்திக்கிற போது நேரடியாக அழைத்துச் செல்வதும் அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தும் சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் அவர்கள் பள்ளி மேம்படும் வண்ணம் பல்வேறு திட்டங்களை முன்வைத்து செயல்பட இருக்கின்றோம் .
எனவே உடனடியாக அப்படிப்பட்ட வல்லமை வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை உடனடியாக 24 மணி நேரத்திற்குள்ளாக நமது வாட்ஸ் அப் தளத்தில் வெளியிட்டு மாநில பொதுச் செயலாளரின் அனுமதி பெறவேண்டும் என்று அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.
என்றும் உங்களுக்காக
கே.ஆர். நந்தகுமார்
மாநில பொதுச்செயலாளர்.