5, 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வா, மூன்றாம் பருவத் தேர்வா? ஆசிரியர்கள் குழப்பம்!

5, 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வா, மூன்றாம் பருவத் தேர்வா? ஆசிரியர்கள் குழப்பம்!



5,8 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வு (Third Term Exam) குறித்து குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.


நடப்பு ஆண்டு முதல் தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம்வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தன் காரணமாக பொதுத்தேர்வுக்கான அடுத்தக்கட்ட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.




இந்த நிலையில், தற்போது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வுகள் நடத்தப்படுமா என்ற குழப்பம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, மூன்றாம் பருவத்துக்கான புதிய பாடப்புத்தகங்கள் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதே போல், பொதுத்தேர்வு எப்படி இருக்கும், என்ன செய்ய வேண்டும் என்பதும் 5,8 மாணவர்களுக்கு தெரியவில்லை. ஆசிரியர்களும் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்துவதில் சிரமம் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் தற்போது மூன்றாம் பருவத்தேர்வுகள் நடைபெறுமா, அவ்வாறு நடத்தப்பட்டால், அது பொதுத்தேர்வுக்கு முன்பு நடைபெறுமா, பொதுத்தேர்வுக்கு பின்பு நடைபெறுமா உள்ளிட்ட சந்தேகங்கள் எழுந்துள்ளது. இத்தகைய காரணங்களால், மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு பயிற்சி அளிப்பதா, மூன்றாம் பருவத்தேர்வுக்கு பயிற்சி அளிப்பதா என்று ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.