10th & +2 தேர்வு கண்காணிப்பாளர் (Exam hall invigilators / Supervisors) களுக்கு ஓர் எச்சரிக்கை:
அடுத்த மாதம் துவங்க இருக்கும் 10 & 12 ஆவது பொதுத்தேர்வுகளில் மாணவர்களை Bit (copy) அடிக்கவிடாமல் தடுக்க வேண்டும். நன்றாக படிக்கும் மாணவர்களை விட Bit அடிக்கும் மாணவர்கள் சில நேரங்களில் அதிக Mark பெற்றுவிடுகின்றனர். அதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
நாம் எவ்வளவு படித்தாலும் Bit அடிப்பவர்கள்தான் அதிக Mark பெறுகின்றனர் என எண்ணி படிப்பதில் அக்கறை செலுத்தாமல் விட்டுவிடுகின்றனர். பல வருடங்களுக்கு முன்னர் Copy அடிப்பதை பிறர் கேவலாக நினைப்பார்கள் என நினைத்த காலம் போய் இன்று Copy அடிப்பதை பெருமையாக / திறமையாக நினைத்து ஜலியாக அனைவரிடத்திலும் சொல்லும் மனநிலை அநேக மாணவ மாணவியர் மத்தியில் வந்து விட்டது.
இதற்கு முழுக்க முழுக்க காரணம் Exam Invigilator / Supervisors தான். அவர்கள் தான் Bit /copy அடிப்பதற்கு உடந்தையாக உள்ளனர். மாணவ மாணவியர்கள் Fail ஆககூடாது - பாவம் Bit அடித்தாவது Pass ஆகட்டும். அதற்கு நம்மால் முடிந்த சிறு உதவிதான் Bit அடிப்பதையும் அடுத்த மாணவர்களை Copy அடிப்பதை கண்டு கொள்ளாமல் இருப்பது என எண்ணி அதற்கு உடந்தையாக இருந்து விடுகின்றனர்.
இது போன்ற சிறு சிறு தவறுகள் தான் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து TNPSC group II & IV முறைகேடு வரை வந்துள்ளது. Exam invigilators / supervisors மாணவ மாணவியருக்கு உதவியதுபோல் TNPSC யிலும் அதே அரசு ஊழியர்களே உதவியுள்ளனர். எனவே 10 & 12 ஆவதுக்கு Bit அடிக்க உதவி செய்பவர்களுக்கும் இதே போன்ற தண்டனை ஒருநாள் கட்டாயம் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு குறிப்பிட்ட TNPSC Exam centre ல் அதிகம் பேர் அதிக Mark பெற்றதை ஆராய்ந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் ஒரு குறிப்பிட்ட Exam hall ல் அதிகம் பேர் அதிக Mark எடுத்தால் அதையும் ஒருநாள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அந்த Hall - exam invigilators / supervisors உடனடியாக வேலை (Dismiss) பறிக்கப்பட்டு Arrest செய்யப்படுவார்கள்.
ஆகவே Exam invigilator / Supervisor களாகிய நீங்கள் மாணவ மாணவியர்களுக்கு இரக்கப்பட்டு நீங்கள் சிறைக்குச் செல்ல தயாராகாதீர்கள்.
மாணவ மாணவயிருக்கு உதவி செய்வதாக நினைத்து அவர்கள் செய்யும் குற்றத்திற்கு நீங்கள் உடந்தையாக இருந்தால் நீங்களும் குற்றவாளிகள் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆசிரியர்கள் அன்று செய்த இது போன்ற சிறு சிறு உதவிகள் தான் இன்று TNPSC Group II & IV போன்ற குற்றங்களுக்கும் அஸ்திவாரம் என்பதை மறவாதீர்கள்.
நீங்கள் ஒரு மாணவனுக்கு உதவி - அவனை Fail ஆகவிடாமல் தடுத்து Pass ஆக்குவதன்மூலம் அவனுக்கு நீங்கள் உதவி செய்வதால் நன்றாக படித்து அவனது சொந்த திறமையால் Pass ஆன மற்றொரு மாணவருக்கு கிடைக்க வேண்டிய இடம் அவனுக்கு கிடைக்க விடாமல் தடைபெற்றதற்கும் நீங்கள்தான் காரணம் என்பதையும் மறவாதீர்கள்.
சுமாராக படிக்கும் மாணவனுக்கு உதவுவதாக நினைத்து நன்றாக படித்த மாணவனுக்கு கிடைக்க வேண்டிய இடத்தை தடுத்து அந்த குற்றத்தையும் நீங்கள்தான் செய்கிறீர்கள்.
தங்கள் Exam centre க்கு வரும் Flying squard (பறக்கும் படை) ல் நாம் மாட்டாமல் இருந்தால் போதும் என நிம்மதி அடையாதீர்கள்.
Result வந்தவுடன் கூட ஏதோ ஒரு அமைப்போ / சமூக ஆர்வலரோ... ஒரு குறிப்பிட்ட hall ல் அதிக Mark வாங்கியுள்ளதாக சந்தேகம் கிளப்பினால் அது Court ல் விசாரணை நடக்கும்போது உங்களுக்கு தண்டனை உறுதி.
👉 சுமாராக படிக்கும் மாணவ மாணவியர்கள் Pass ஆவதற்காக மட்டுமே Copy அடிப்பது போய் இன்று FIRST RANK வாங்குவதற்கே Bit / Copy அடிப்பது வந்துவிட்டது. ஆகவே இது போன்ற தவறை இனிமேலும் கண்டிப்பாக செய்ய மாட்டீர்கள் என நம்புகிறோம்.
- பொியசாமி, அாியலூா்