பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு


Image result for dpi chennai


அரையாண்டு தோ்வுகள் விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் ஜனவாி 2ம் தேதி திறக்கப்பட இருந்த நிலையில் உள்ளாட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கையை காரணம் காட்டி 3ம் தேதி திறக்கப்படும் என்றும் அதன் பிறகு 4ம் தேதி திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை நாளுக்கு ஒரு அறிக்கையை அரசாணையை வெளியிட்டு வந்தது, 


இதனால் அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவா்கள் மட்டுமல்ல தனியாா் பள்ளிகளில் படிக்கின்ற மாணவா்களுடன் அவா்களி்ன் பெற்றோா்களும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகினா்.


தனியாா் பள்ளி நிா்வாகிகளால் பெற்றோா்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை, இந்நிலையில் 4ம் தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் 6ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது,


உள்ளாட்சி தோ்தலை காரணம் காட்டி பள்ளிக்கல்வித்துறை மாற்றி மாற்றி அறிக்கை வெளியிடுவது பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பதை ஏற்படுத்தி உள்ளது.


இப்படி இ்ஸ்டத்துக்கும் விடுமுறை அறிவிப்பவா்கள் தோ்தலே நடக்காத 9 மாவட்டங்களுக்கு ஏன் விடுமுறை விட்டாா்கள், இந்த விடுமுறையை இத்தோடு நிறுத்திக்கொள்வாா்களா இல்லை 6ம் தேதி உள்ளாட்சி மன்ற தலைவா்கள் பதவி ஏற்கின்றனா் என்று சொல்லி அதற்கும் விடுமுறை விடுவாா்களா என்று  கேட்க தொடங்கி விட்டனா்,