திருவண்ணாமலை மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும்
என் இனிய காலை வணக்கம். நான் தான் உங்கள் நந்தகுமார். அனைவருக்கும்
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற
25 .01.2020
சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட அனைத்து பள்ளி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் மற்றும் தனியார் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழக மாநில செயலாளர் திரு. ஏ .ஆர். சண்முகம் சாமுவேல் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள்
ஆர்.டி.ஓ. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தாசில்தார்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர். K.R. நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு தனியார் பள்ளி நிர்வாகிகளின் பிரச்சனைகள் கோரிக்கைகள் தீர்மானங்கள் தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேருக்கு நேர் பேசி உங்களுடைய தொடர் தற்காலிக அங்கீகாரம் உடனே உங்களுக்கு வழங்கிட...
அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் பாலமாக இருந்து உடனடியாக உங்கள் பிரச்சினையைத் தீர்க்கவும் புத்தாண்டு பொங்கல் விருந்தும் விருதுகளும்..,... உங்களுக்கு வழங்கி கௌரவம் சேர்க்க விரும்புகின்றோம். அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமாய் உங்கள் அனைவரையும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அன்போடு அழைக்கின்றேன் இச்செய்தியை தெரிந்து கொண்ட அனைத்து பள்ளி நிர்வாகிகளும் உங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகிகள் அனைவரரையும் தவறாமல் அழைத்து வந்து சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து சங்கத்திற்கு வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து தமிழகத்திலேயே தலைசிறந்த மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
என்றும் தனியார் பள்ளிகளின் நலம் மட்டுமே நாடும் உங்கள்
கே ஆர் நந்தகுமார்.
மாநில பொதுச்செயலாளர்.
மற்றும் மாவட்டத் தலைவர்
சண்முகம் சாமுவேல்
திருவண்ணாமலை
மாவட்ட வட்டநிர்வாகிகள்.