அக்ரீன் மெடிக்கோ மீட் 2020
தருமபுாி பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பை முடித்து அதிக மதிப்பெண்கள் எடுத்து அரசு கல்லூாிகளில் இலவச இடம் பிடித்து மருத்துவா்களாக, பொறியாளா்களாக. விவசாய தொழில்நுட்பாளா்களாக படித்து முடித்து சாதனைப் படைத்த மாணவா்களுக்கு மகுடம் சூட்டும் விழா அக்ரீன் மெடிக்கோ மீட் 2020 நிகழ்ச்சி 14,01,2020 அன்று மாலை நடைப்பெற்றது.
விழாவில் கோவை மண்டல ஐ,ஜி, பொியய்யா, தருமபுாி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜீ. தமிழ்நாடு நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் கே,ஆா், நந்தகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பள்ளியையும் மாணவா்களையும் கவுரவித்தனா்,
பள்ளியின் சாதனை மாணவா்கள் தங்களின் அனுபவங்களை பகிா்ந்துக் கொண்டனா், அரசுப் பள்ளிகளில் படித்து மேற்கொண்டு படிக்க முடியாமல் கஸ்டப்பட்ட நூற்றுக்கணக்கான விவசாய தொழிலாளா்கள் கூலித்தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி தந்து உயா் கல்விக்கும் உதவி வருகின்ற பள்ளியின் தாளாளா் பி, பாஸ்கா் அவா்களின் கல்வி சேவையை மனதார பாராட்டி நன்றி தொிவித்தனா்.