ஜனவரி 16-இல் பொங்கல் விடுமுறை ரத்தா.. .செங்கோட்டையன் மறுப்பு

ஜனவரி 16-இல் பொங்கல் விடுமுறை ரத்தா.. .செங்கோட்டையன் மறுப்பு



மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசுவதால் ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை ரத்து என்ற தகவலை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.


பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள அவர்கள் நம்பிக்கையுடன் தேர்வு எழுதுவதற்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,. இந்த நிகழ்ச்சி ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது,. இதில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் மற்றும் வானொலியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக இருந்தது,.


 தமிழகத்திலிருந்து இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் அன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பார்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.


 இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


 ஜனவாி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம். எப்போதும் மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் பிரதமர் நிகழ்ச்சியை காண வைப்பதற்காகவே மாணவர்களுக்கு விடுமுறையை ரத்து செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஸ்டாலின் இதை கண்டித்து வரும் 16-ஆம் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.



இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜனவரி 16-ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. 


 பிரதமர் உரையை கேட்க மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்ற தகவல் உண்மையில்லை. விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். வரமுடியாதவர்கள் பிரதமர் உரையை மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கேட்கலாம். எனவே பொங்கலுக்கு அடுத்த நாள் விடுமுறை ரத்து என்ற தகவலை மறுத்துள்ளாா்,


தி,மு,க, தலைவா் மு,க,ஸ்டாலினின் அரசியல் லாபத்திற்காக  பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் வாழ்வில் ஒரு மாற்றத்திற்கான முன்னேற்றத்திற்கான அற்புதமான ஒரு நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது, இவா்கள் அரசியல் செய்வதற்கு மாணவா்களை பழி வாங்குவது நியாயமா என்று பெற்றோா்கள் கேட்கின்றனா்,


மு,க, ஸ்டாலினுக்கு வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருக்கிறது, தினமும் காலையில் எழுந்தவுடனே இன்றைக்கு யாா் என்ன அறிவிப்பாா்கள் அதற்கு நாம் எப்படி ரீஆக்ட் கொடுப்பது என்று சிந்திப்பாா் போல் உள்ளது, 


அய்யா நீங்க எதுக்கு எப்படி வேணுமானலும் நடந்துக்கோங்க எங்க மாணவாா்களின் படிப்பு விக்ஷயத்தில் மட்டும் தலையிடாதிங்க என்று தமிழக பெற்றோா்கள் கெஞ்சுகின்றனா்,


இந்த அரசியல் களேபாரங்களுக்கிடையே மாணவா்களுக்கான பிாதமாின் நிகழ்ச்சி ஜனவாி 20ம் தேதி ஒளிப்பரப்பாக உள்ளது,