ஜனவாி 14ல் தருமபுாி மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
தர்மபுரி மாவட்ட நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும்
சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும்
என் இனிய வணக்கம்.
நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன். தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின விழா வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
தமிழ்நாடு முழுக்க வாரம்தோறும் ஒரு மாவட்டம் என்று பள்ளி நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அவர்களின் கோரிக்கைகளையும் தீர்மானங்களையும் அரசுக்கு சொல்லி பல்வேறு கோரிக்கைகளில் வென்று வருகின்றோம். அதுமட்டுமல்ல நமது பள்ளிகளில் உள்ள பிரச்சனைகள் அறிந்து அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து பேசி உங்கள் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றோம்.
வரும் 14ஆம் தேதி நமது தர்மபுரி மாவட்ட நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசி அளவளாவி உங்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கும் நமது நட்பு வட்டத்தை மேம்படுத்துவதற்கும் உங்கள் பள்ளிகளை உயர்த்துவதற்கும் உங்கள் பள்ளியில் பயிலும் பிள்ளைகள்
அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க சிறந்த கல்வியாளர்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் நாம் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி அருகில் உள்ள பச்சமுத்து மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நமது சங்கத் தலைவர்களில் முதன்மையானவரும் மூத்தவரும் ஆன திரு. பாஸ்கர் அவர்கள் தலைமையில்
மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் கலந்துரையாடல் மற்றும் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா நிகழ்ச்சியில் தங்களுக்கு
நல்விருந்தோம்பல் உடன் தாங்கள் இதுவரை ஆற்றிய கல்விப் பணிக்காக உங்களை கௌரவித்து விருதுகள் வழங்கி கௌரவித்திட
மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதன்மை கல்வி அலுவலர் வட்டார போக்குவரத்து அலுவலர் வட்டாட்சியர்
தீஅணைப்பு துறை அலுவலர் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் நானும் நமது சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்கள். அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கின்றோம். அனைவரும் வாருங்கள் தங்கள் மேலான கருத்துக்களை தாருங்கள்.
என்றும் உங்கள் நலம் நாடும் .
கே ஆர். நந்தகுமார். மாநில பொதுச்செயலாளர்.