நாளை காலை 12 மணிக்கு......
தருமபுாி பள்ளி நிா்வாகிகளுக்கான மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம்
தர்மபுரி மாவட்ட நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
நான் தான் உங்கள் நந்தகுமார் நமது சங்கத்தின் சார்பில் தர்மபுரியில் பச்சமுத்து மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் சேலம் மெயின் ரோடு தர்மபுரியில் வருகின்ற
14. 01. 2020 செவ்வாய்க்கிழமை பகல் 12. 30 மணியளவில் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் நேரில் வரவேண்டும். தாங்கள் ஆற்றிய சிறப்புமிக்க கல்விப் பணிக்காக உங்களை பாராட்டி உங்களுக்கு பொங்கல் நல்விருந்தும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கும் விழாவிற்கு பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமிகு. பாஸ்கர் அவர்கள் தலைமை ஏற்கவும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் சுகாதாரத்துறை தீயணைப்பு துறை அலுவலர்களோடு நானும் கலந்து கொண்டு நமது கோரிக்கைகள் தீர்மானங்கள் தேவைகள் சம்பந்தமாக விவாதிக்கிறோம்.
அனைத்து பள்ளி நிர்வாகிகள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வண்ணம் அரசுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் பாலமாக இருந்து நமது நல்லுறவை வலுப்படுத்தவும் உங்கள் பள்ளிகளை மேம்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டத்தில் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் மேலான கருத்துக்களை சொல்லி பயன்பெற வேண்டுமாய் அன்போடு அழைக்கின்றேன்..
எங்கள் அழைப்பை ஏற்று அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் இருகரம் கூப்பி அழைக்கின்றோம் 12,30 மணி முதல் 3 மணி வரை மட்டுமே கூட்டம் நடைபெறும் அனைவரும் வருக ஆதரவு தருக
என்றும் உங்கள் நலம் நாடும்
கே.ஆர்.நந்தகுமார்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை
மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம். தர்மபுரி மாவட்டம்