பள்ளிக் கல்வித்துறை ஆணையாளருடன் சந்திப்பு
நேற்று காலை 11 மணியளவில் பள்ளிக்கல்வித் துறை ஆணையாளர் திருமதி. சுஜி தாமஸ் ஐஐஎஸ் அவர்கள் கூட்டியுள்ளகூட்டத்தில் தனியார் பள்ளிகள் சங்கங்களின் தலைவர்களை சந்தித்து தனியார் பள்ளிகளின் பிரச்சனைகள் கோரிக்கைகளை கேட்டறிந்தார் உடன் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் முனைவர் கா கருப்புசாமி இணை இயக்குனர் ஸ்ரீதேவி அவர்களுடன் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள்சங்க மாநில பொது செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் மாநிலத் துணைச் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் உள்ள சங்க தலைவர்கள் கலந்துகொண்டு பேசியபோது எடுத்த படம். பள்ளி நிர்வாகிகளின் பார்வைக்கு பணிந்து சமர்ப்பிக்கின்றோம்.
ஐந்து மற்றும் 8-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்திக் கொள்ளவும் கேள்வித்தாள் மிகவும் எளிமையாக இருக்கும். பள்ளி மாணவர்கள் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளே திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் மாதிரி வினாத்தாள் தங்களுக்கு ஓரிரு நாட்களில் அனுப்பப்படும் என்றும் நிலுவையில் உள்ள பள்ளிகளின் தொடர் தற்காலிக அங்கீகாரம் முழுமையாக வழங்கப்படும் நிரந்தர அங்கீகாரம் வழங்குவது சம்பந்தமாக அரசோடு பேசி நல்ல முடிவு அறிவிக்கப்படும்.
பழைய பள்ளிகளுக்கு பழைய கட்டிடங்களுக்கு டிடிசிபி சிஎம்டிஏ கேட்கக் கூடாது என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது
RTE கல்வி கட்டண பாக்கியை உடனே வழங்க வேண்டும். அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறது
அதை தர வேண்டும் என்றும் அதைவிடுத்து அதில் எது குறைவோ அதை தருகிறேன் என்று அரசு நிர்ணயித்துள்ளது காட்டிலும் மிகக் குறைவாகத் தருவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பினோம்.
நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலை பள்ளியாக மாற்றிட உடனடியாக அரசாணை வெளியிட கேட்டுள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் பெறவேண்டும் என்பதை மாற்றிஇணையதள வழியாக ஆன்லைன் அங்கீகாரத்தை 4 சான்றுகளுடன் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தரவேண்டும் .
தமிழ்நாடு முழுக்க அனைத்து முதன்மை கல்வி மாவட்ட கல்வி அலுவலகங்களில்
நடைபெறும் லஞ்சம் ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டுகளையும் பள்ளிக்கல்வித்துறை ஆணையாளரிடம் பதிவு செய்திருக்கின்றோம்.
பள்ளி நிர்வாகிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். உங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நமது சங்கம் தொடர்ந்து உங்களுக்காக குரல் கொடுக்கும் என்ற உறுதிமொழியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். நமது கோரிக்கைகள் மிக விரைவாக நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
உங்கள் நலம் நாடும்
கே.ஆர்.நந்த குமார்
மாநில பொதுச்செயலாளர்.